நான் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் கழக தலைமையின் ஆணைக்கேற்ப கழக பணிகள் ஆற்றிக்கொண்டிருக்கின்றேன். நான் கழகத்தில் வகிக்கும் மற்றும் வகித்த பதவிகளின் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன,
1988: எழும்பூர் பகுதி மாணவரணி அமைப்பாளர்
1991: வடசென்னை மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
1998: வடசென்னை மாவட்ட இளைஞர் அணி அமைப்பு செயலாளர்
2006 to 2011: மாமன்ற இரண்டாவது வார்டு கவுன்சிலர்
2008: பெரம்பூர் தொகுதி பகுதி செயலாளர்
11 July 2011 to 30 December 2014: வடசென்னை மாவட்ட பொறுப்பாளர்
2015 முதல் தற்போது வரை: மாநில இளைஞர் அணி துணைசெயலாளர்
April 2019 முதல்: ஏப்ரல் மாதம் நடைபெற்ற பெரம்பூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் கழக தலைவர் தளபதியால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அதிக அளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி கொண்டிருக்கின்றேன்.