MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

மு க ஸ்டாலின்

  

பிறப்பு:

1953 ஆம் ஆண்டு மார்ச் 1ம் தேதி கலைஞர் மு.கருணாநிதி-தயாளு தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தார் தளபதி என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் மு.க. ஸ்டாலின். ரஷ்யாவின் அதிபர் ஜோசப் ஸ்டாலின் நினைவாக ஸ்டாலின் எனப் பெயர் சூட்டினார் அவரது தந்தை கலைஞர் மு கருணாநிதி. தளபதி உடன் பிறந்தோர், முத்து, அழகிரி, செல்வி, தமிழரசு மற்றும் கனிமொழி.

dmk

கல்வி:

தளபதி ஸ்டாலின், சென்னை அண்ணா சாலையில் உள்ள சர்ச் பார்க் கான்வென்ட்டில் படிக்க விண்ணப்பித்தபொழுது அவரின் புரட்சிப் பெயரைக் கண்டு அவரை பள்ளியில் சேர்த்துக்கொள்ள பள்ளி மேலாண்மை மறுத்தது. இதனால் சென்னை சேத்துப்பட்டு கிறித்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து மேல்நிலை வரை கல்வி பயின்றார்.

1967-1968 ஆண்டுகளில் தளபதி மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராகப் படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு “கோபாலபுரம் இளைஞர் திமுக” என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவ்வமைப்பின் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு சமூகப்பணிகளை செய்து வந்தார்.

1972ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற செங்கற்பட்டு மாவட்ட தி.முக.வின் சார்பாகத் தோழர்களை அழைத்துக்கொண்டு தொடர் ஓட்டமாக வந்து அண்ணா ஜோதியை தலைவர் கலைஞர் அவர்களிடம் வழங்கினார். 1973ம் ஆண்டு திமுக-வின் பொதுக்குழு உறுப்பினரானார்.

  

கலை - கழகம்:

தந்தையின் அரசியல்-கலை ஆளுமை காரணமாக, தளபதி ஸ்டாலினுக்கும் இளம் வயதிலேயே நாடகக்கலை மற்றும் அரசியலில் ஆர்வம் இருந்தது. அவர் நடித்த முதல் நாடகம் திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் அஞ்சுகம் நாடக மன்றம் நடத்திய "முரசே முழங்கு" என்ற நாடகமாகும். இந்நாடகம் கலைஞர் முன்னிலையில், எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்தது. இந்நாடகம் பல இடங்களிலும் நடத்தப்பட்டது. நான்கு ஆண்டுகள் கழித்து அதன் வெற்றிவிழா திருவல்லிக்கேணியில் அதே மேடையில் நடத்தப்பட்டது.

இதேபோல, திண்டுக்கல் தீர்ப்பு, நீதி தேவன் மயங்குகிறான், நாளை நமதே என பல நாடகங்களில் நடித்துள்ளார் ஸ்டாலின். அத்தனையும் திராவிட இயக்கத்தின் கொள்கை விளக்க நாடங்கள் ஆகும்.

dmk   

திரைப்படம்:

தளபதி ஸ்டாலின் அவர்கள் சமூக நலக் கருத்துக்களை வலியுறுத்தும் சில திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ஒரே ரத்தம்(1988), மக்கள் ஆணையிட்டால்(1988), குறிஞ்சி மலர்(நெடுந்தொடர்) ஆகிய படைப்புகளில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

  

அரசியல்

dmk

1975ல் பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். தேசிய அளவிலும், மாநிலங்களிலும் அதை எதிர்த்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அன்றைய கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு நெருக்கடி நிலையை அடியோடு எதிர்த்ததால் மத்திய அரசால் சர்வாதிகார முறையில் கலைக்கப்பட்டது. இதையடுத்து முரசொலி மாறன், தளபதி மு.க ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என 25000க்கும் மேற்பட்டோர் ‘மிசா' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

நெருக்கடி நிலை ஒடுக்குமுறையால் ஸ்டாலின் அவர்கள் ஓராண்டு காலம் சிறையில் இருந்தார். மிசாவில் தளபதி ஸ்டாலினுடன் சிறை வைக்கப்பட்ட சிட்டி பாபு காவல்துறையினர் தாக்கிய தீவிரத்தால் இறந்துபோனது கழகத்தின் வரலாற்றில் ஆறாத வடுவை ஏற்படுத்தியது. ஸ்டாலினை தீவிரமான அரசியலில் பங்குபெற வைத்து பக்குவபடுத்தியதில் இந்த சிறை வாசத்துக்கு பெரும்பங்குண்டு.

dmk

இளைஞரணி:

இளைஞரணி அமைப்பு ரீதியாக 1980 இல் மதுரையிலே உள்ள சான்சிராணி பூங்காவிலே தொடங்கப்பட்டது  1982 இல் திருச்சியிலே 2ம் ஆண்டு விழாவில் 7 பேரை கொண்ட ஒரு அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புக் குழுவில் தளபதி மு.க.ஸ்டாலின் ஒரு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புக்குழு சுற்றுப்பயணம் நடத்தி, மாவட்ட, ஒன்றிய, நகர அளவிலும், ஒவ்வொரு ஊரிலும் இளைஞரணியைக் கட்டியமைத்தார். இதனால் அவருக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது. இந்த பொறுப்பில் சிறப்பாக செயல்பட்ட மு.க.ஸ்டாலின் அவர்கள் “தளபதி” என்று அழைக்கப்பட்டார். தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் இளைஞரணி முதன்முதலாக அன்பகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டது, இன்றும் செயல்பட்டு வருகிறது.

  

2003இல் நடைபெற்ற திமுகவின் பொதுக்கூட்டத்தில், துணை பொதுச்செயலாளராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார்.

  

2008 ம் ஆண்டு திமுகவின் பொருளாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

dmk
  

சட்டமன்ற பணி:

தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தேர்தல் வரலாறு கடந்த 35 ஆண்டுகளாக தமிழகத்தின் வரலாற்றுடன் இரண்டற கலந்துள்ளது. 1984-ஆம் ஆண்டு முதல் 2016 வரை, 8 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு அதில் 6 முறை வெற்றி பெற்று முன்மாதிரி சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணி ஆற்றி வருகிறார்.

கடந்த இருபது ஆண்டுகளாக தமிழக மக்கள் அவரை தொடர்ந்து சட்டமன்றத்துக்கு தேர்வு செய்து வருகின்றனர். மக்கள் பணியில் கவனமும், சரியான திட்டமிடலும் அவரின் சட்டமன்ற வெற்றிகளுக்கு முழுமுதற் காரணம். தொகுதி மக்களின் துயர் துடைப்பதிலும், வளர்ச்சியிலும் தணியாத ஆர்வம் கொண்டவர் தளபதி மு.க. ஸ்டாலின். பல்வேறு பதவிகளை வகித்தாலும், வாக்களித்த தொகுதி மக்களின் நலனை எந்த வித குறைகளுமின்றி நிறைவேற்றுவதில் மிகுந்த கவனமெடுத்து செயல்படுவார்.

  

தேர்தல் பயணம்:

ஆண்டு தொகுதி முடிவு
1984  ஆயிரம் விளக்கு  தோல்வி
1989  ஆயிரம் விளக்கு  வெற்றி
1991  ஆயிரம் விளக்கு  தோல்வி
1996  ஆயிரம் விளக்கு  வெற்றி
2001  ஆயிரம் விளக்கு  வெற்றி
2006  ஆயிரம் விளக்கு  வெற்றி
2011  கொளத்தூர்  வெற்றி
2016  கொளத்தூர்  வெற்றி


dmk


துணை முதல்வர்:

கடந்த 2009-ஆம் ஆண்டு, தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக துணை முதல்வர் பதவியை தளபதி மு.க. ஸ்டாலின் வகித்தார். துணை முதல்வர் பதவியில் அவர் ஆற்றிய சாதனைகள் வளமான தமிழகத்திற்கு வழிகோலியது.


எதிர்கட்சித் தலைவர்:

2016ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்  போட்டியிட்டு  மு. க ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 89 சட்டமன்ற உறுப்பினர்களுடன் தமிழகத்தில் பலம் வாயந்த எதிர்க்கட்சியாக மக்கள் திமுகவை தேர்வு செய்தனர். தற்போது தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக தளபதி மு. க. ஸ்டாலின் சிறப்புடன் செயலாற்றி வருகிறார்.


dmk

கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2016 தமிழக சட்டமன்ற தேர்தல்களில், திமுகவின் தேர்தல் கூட்டணியை முடிவு செய்ததிலும், பல வேட்பளார்களை முடிவு செய்ததிலும் தளபதி மு.க. ஸ்டாலின் பெரும் பங்காற்றினார்.



dmk
  

மேயர்:

மாநகராட்சி மன்ற  சட்டம் திருத்தப்பட்ட பின்னர், 1996ம் ஆண்டு நடந்த சென்னை மேயர் தேர்தலில் முதல் முறையாக நேரடியாக மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையை தளபதி மு.க. ஸ்டாலின் பெற்றார்.

மேயர் பதவியில் இருந்தபோது ஸ்டாலினுக்கு சென்னை மக்களிடையே பெருத்த வரவேற்பு கிடைத்தது. துப்புரவுப் பணிக்களுக்கு முன்னுரிமை அளித்து சென்னை நகரத்தின் குப்பை அள்ளும் முறைகளை நவீனப்படுத்தினார். சுகாதாரம், பொது கட்டுமானம், பள்ளிகள் என ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி சென்னை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினார்.



dmk


அமைச்சர்:

2006ல் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்று கலைஞர் மு.கருணாநிதி, ஐந்தாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்க, முதல் முறையாக தளபதி மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் ஊரகவளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சரானார். அமைச்சர் பதவியில் திறம்பட செயலாற்றி தமிழகத்துக்கு பல முன்னோடி திட்டங்களை அறிமுகம் செய்தார்.



dmk


தலைவர்:

2006ல் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்று கலைஞர் மு.கருணாநிதி, ஐந்தாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்க, முதல் முறையாக தளபதி மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் ஊரகவளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சரானார். அமைச்சர் பதவியில் திறம்பட செயலாற்றி தமிழகத்துக்கு பல முன்னோடி திட்டங்களை அறிமுகம் செய்தார்.

2018 ஆகஸ்ட் 8ல் தமிழத்தின் முதுபெரும் தலைவரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் காலமான பிறகு திமுகவின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். சாதாரண உறுப்பினராக சேர்ந்து களப்பணியாற்றி வட்டப் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என முறைப்படி தேர்வு பெற்று களப்பணிகள் வாயிலாக கட்சியின் பொறுப்பு படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர், செயல் தலைவர், தலைவர் என உயர்ந்து  50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கழகப்பணி செய்துவரும் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் கலைஞருக்கு அடுத்து கழகத்தின் இரண்டாவது தலைவராக பொறுப்பேற்றது கழகத்துக்கு மட்டுமன்றி, தமிழ்கத்துக்கும் பெருமைக்குரிய நிகழ்வாக அமைந்தது.


குடும்பம்:

தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா என்கிற சாந்தா. இவர்களுக்கு உதயநிதி என்ற மகனும், செந்தாமரை என்ற மகளும் உள்ளனர். மகன் உதயநிதி ஸ்டாலின் முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளார். தமிழ் திரையுலகில் அவர் புகழ்பெற்ற நடிகராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும், உள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகம்